சலார் படத்தின் மொத்த பட்ஜெட் எத்தனை கோடி தெரியுமா ?

பாகுபலி என்கிற பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்திய முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ் . பாகுபலி படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்த படம் சாஹோ . இந்த படத்தை சுஜித் இயக்கி இருந்தார் .ஷ்ரதா கபூர் நாயகியாக இந்த படத்தில் நடித்து இருந்தார் .இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை . இதனை தொடர்ந்து இவர் நடித்த படம் ராதே ஷ்யாம் . இந்த படத்தை ராதே கிருஷ்ணா குமார் இயக்கி இருந்தார் .இந்த படத்திற்கு தமன் இசையமைத்து இருந்தார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை .

தற்பொழுது பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார் . கடந்த இரண்டு படமும் தோல்வி அடைந்து உள்ளதால் சலார் படத்தை நிச்சயம் மிக பெரிய அளவில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளார் பிரபாஸ் . சலார் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது அதற்கு காரணம் பிரசாந்த் நீல். இந்நிலையில் பிரபாஸ் ஏற்கனவே நடிப்பதாக இருந்த பிராஜெக்ட் கே என்கிற படத்தையும் மற்றும் இயக்குனர் மாருதி இயக்கும் ஒரு படத்தையும் தள்ளி வைத்துள்ளார் பிரபாஸ் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் சலார் படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது அடுத்த வருடம் செப்டம்பர் மாதம் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது . இந்த படம் நடிகர் பிரபாஸ் அவர்களுக்கு பெரிய வெற்றியை தேடி தரும் என்று நம்பப்படுகிறது .

Share.