அஜித் படத்தில் சல்மான் கான் !

சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் குறிப்பாக பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . உதாரணத்திற்கு சூரரைப்போற்று மற்றும் விக்ரம் வேதா போன்ற படங்களை கூறலாம் .அந்த வகையில் தற்பொழுது மீண்டும் ஒரு தமிழ் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது . அந்த படத்தின் பெயர் வீரம் . 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் அஜித் கதாநாயகனாகவும் நடிகை தமன்னா கதாநாயகியாகவும் நடித்த இருந்தனர் . மேலும் நடிகர் விதார்த் , சந்தானம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர் . அந்த படத்தை இயக்கியவர் சிறுத்தை சிவா . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் டி.எஸ்.பி .

மேலும் வீரம் படமும் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படமும் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் பாடல்களும் அந்த சமயத்தில் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் இயக்குனர் பர்ஹாத் சம்ஜி என்ற இயக்குனர் இந்தியில் வீரம் படத்தை இயக்குகிறார் . நடிகர் சல்மான் கான் அஜித் நடித்த வேடத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு கபி ஈத் கபி தீவாளி என்று தலைப்பு வைத்துள்ளனர் .மேலும் நடிகை தமன்னா அடித்து வேடத்தில் பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்கிறார் . ஏற்கனவே ஹவுஸ்ஃபுல் ஹவுஸ்ஃபுல் 4, மோகன்ஜாத்தாரோ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் மற்றொரு காரணம் கூறப்படுகிறது . பாலிவுட் கதாநாயகிகள் பலர் இந்த படத்தில் நடிக்க மறுத்துள்னனர் அதன் பிறகு தான் பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகி இருக்கிறது .
தமிழில் ஹிட் அடித்த வீரம் படம் ஹிந்தியில் ஹிட் அடிக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Share.