சமந்தா வில்லியாக நடித்துள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸ் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘சகுந்தலம்’ என்ற தெலுங்கு படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸுக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி இந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

இந்த எமோஜியை #TheFamilyMan, #TheFamilyMan2, #TheFamilyManOnPrime போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டியிருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ப்ரியாமணி, ஷாரிப் ஹாஸ்மி, சரத் ஹெல்கர், பவன் சோப்ரா, தேவதர்ஷினி, மைம் கோபி, அழகம் பெருமாள், விபின் ஷர்மா, உதய் மகேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். இவ்வெப் சீரிஸ் இன்று (ஜூன் 4-ஆம் தேதி) ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸாகியுள்ளது. தற்போது, இவ்வெப் சீரிஸை ‘அமேசான் ப்ரைம்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், வெப் சீரிஸ் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

1

2

3

Share.