‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸில் வில்லி ரோல்… சமந்தா ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்திய செய்தி!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. இப்போது, சமந்தா நடிப்பில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற தமிழ் படமும், ‘தி ஃபேமிலி மேன்’ (சீசன் 2) என்ற ஹிந்தி வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ‘தி ஃபேமிலி மேன்’ வெப் சீரிஸ் சீசன் 2-வின் டீசரை ரிலீஸ் செய்தனர். மனோஜ் பாஜ்பாய் ஹீரோவாக நடித்துள்ள இந்த சீரிஸில் சமந்தா பவர்ஃபுல்லான வில்லி ரோலில் மிரட்டப்போகிறாராம்.

இதனை இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கி உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இவ்வெப் சீரிஸுக்கென ஸ்பெஷல் ட்விட்டர் எமோஜி வெளியிடப்பட்டது. இந்த எமோஜியை #TheFamilyMan, #TheFamilyMan2, #TheFamilyManOnPrime போன்ற ஹேஸ்டேக்குகளில் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளதாம்.

முதலில், இந்த சீரிஸை வருகிற பிப்ரவரி 12-ஆம் தேதி ஹிந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, சீரிஸின் வெளியீட்டை சம்மருக்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை படத்தின் இயக்குநர்களே ட்விட்டரில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளனர்.

Share.