சமுத்திரக்கனி – தம்பி இராமையா நடித்துள்ள ‘விநோதய சித்தம்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடித்துள்ள புதிய படமான ‘விநோதய சித்தம்’ இன்று (அக்டோபர் 13-ஆம் தேதி) பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸாகியுள்ளது. ஸ்ரீவத்சன் – விஜி இருவருடன் இணைந்து சமுத்திரக்கனியே திரைக்கதை – வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியுள்ளாராம்.

இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி இராமையா, தீபக், ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஹரி, நமோ நாராயணன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, யுவலக்ஷ்மி, ஷெரின் ஆகியோர் நடித்துள்ளனர். சத்யா இசையமைத்துள்ள இந்த படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை ‘அபிராமி மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ளார். இப்போது, இந்த படத்தை ‘ஜீ5’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.