சந்தானத்தின் ‘டிக்கிலோனா’… ரிலீஸானது ‘பேர் வச்சாலும் வைக்காம’ ரீமிக்ஸ் பாடல்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘பாரிஸ் ஜெயராஜ்’ கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ‘கொரோனா’ லாக் டவுனுக்கு முன்பே சந்தானம் நடிக்கும் புதிய படமான ‘டிக்கிலோனா’-வின் ஷூட்டிங் முடிந்து விட்டது.

இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கி வருகிறார். பொதுவாகவே சந்தானம் படத்தில் காமெடி சூப்பராக இருக்கும். இந்த படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று ரோல்களில் சந்தானம் மாஸ் காட்டப்போகிறாராம். மேலும், முக்கிய ரோல்களில் அனகா, ஷிரின், ஹர்பஜன் சிங், நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த ராஜ், யோகி பாபு, ராம்தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இப்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘KJR ஸ்டுடியோஸ்’ சந்தானம் ரசிகர்களுக்காக இதன் ட்ரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டது. இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்த படத்தில் கமல்ஹாசனின் ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் ‘பேர் வச்சாலும் வைக்காம’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். தற்போது, இப்பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷனை சந்தானம் ரிலீஸ் செய்துள்ளார்.

Share.