சந்தானத்தின் ‘குலுகுலு’ திரைப்படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘குலுகுலு’ இன்று (ஜூலை 29-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ரத்னகுமார் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் அதுல்யா, நமீதா, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன் – சேசு, மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.