சந்தானத்தின் ‘பாரிஸ் ஜெயராஜ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானம் நடிப்பில் ‘பாரிஸ் ஜெயராஜ், சபாபதி, டிக்கிலோனா, சர்வர் சுந்தரம்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பாரிஸ் ஜெயராஜ்’ என்ற திரைப்படம் இன்று (பிப்ரவரி 12-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

இந்த படத்தை இயக்குநர் ஜான்சன் இயக்கியுள்ளார். இதில் ஹீரோயினாக அனைகா சொட்டி நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் சஸ்டிகா ராஜேந்திரன், ப்ருத்வி ராஜ், மொட்ட ராஜேந்திரன் நடித்துள்ளார்களாம். இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை தயாரிப்பாளர் கே.குமார் தனது ‘லார்க் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இப்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Share.