சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் காமெடி நடிகர் சந்தானம். இப்போது ஹீரோவாகவும் அவதாரம் எடுத்து அடுத்தடுத்து சில படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். சந்தானத்தின் புதிய படமான ‘சபாபதி’ நேற்று (நவம்பர் 19-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ப்ரீத்தி வர்மா டூயட் பாடி ஆடியுள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், சாயாஜி ஷிண்டே, வம்சி, மாறன், ‘குக் வித் கோமாளி’ புகழ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார், பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருந்தார், லியோ ஜான் பால் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நேற்று இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.65 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.