நடிகர் விஜய்யின் 66-வது படம் இப்படி தான் இருக்கும் – சரத்குமார்

நடிகர் சரத்குமார் 90களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் . நாட்டாமை , சூர்யவம்சம் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார் . முதலில் வில்லனாக அறிமுகமான இவர் பிறகு கதாநாயகனாக நடிக்க தொடங்கினார் . மேலும் சரத்குமார் அரசியல் கட்சி ஒன்றும் வைத்துள்ளார் . கடந்த காலங்களில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு அரசியலில் தீவிரம் காட்டி வந்த நடிகர் சரத்குமார் தற்பொழுது மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார் . இவர் வசம் 10 படங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் நடிகர் விஜய் வம்ஷி இயக்கத்தில் நடித்துக் கொண்டு இருக்கும் படத்திலும் சரத்குமார் அப்பாவாக நடிக்கிறார் .

சமீபத்தில் விஜய் நடிக்கும் கதை பற்றி பேசி உள்ள சரத்குமார் இந்த படத்தின் கதை ரொம்ப பவர்புல்லான கதை என்றும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருப்பதாக தெரிவித்துள்ளார் .மேலும் நான் நடித்த சூர்யவம்சம் படத்தின் 250வது நாள் விழா சென்னையில் உள்ள கமலா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நான் அந்த மேடையில் பேசி இருந்தேன். அது இப்போது உண்மையில் நடந்திருக்கிறது. இதை நான் விஜய் இடத்திலும் தெரிவித்தபோது, நீங்கள் அப்போது பேசியது இன்னமும் என் நினைவில் உள்ளது என்று தெரிவித்தார். அந்தளவுக்கு விஜய்யின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று நான் அப்போதே கணித்தேன். அது அப்படியே நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார் சரத்குமார்.

Share.