‘சூப்பர் ஸ்டார்’ தான் இயக்குநரின் முதல் சாய்ஸாம்… ரஜினி நடிக்கவிருந்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்த சரத்குமார்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது.

ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’-ஐ பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். தற்போது, ரஜினி நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

2005-யில் ரிலீஸான தமிழ் படம் ‘ஐயா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹரி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக சரத்குமார் நடித்திருந்தார். ஆனால், ஹரியின் முதல் சாய்ஸாக இருந்தது ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி தானாம். பின், சில காரணங்களால் ரஜினி இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.

Share.