நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசிய சசிகலா… என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இந்த ஆண்டு (2021) அக்டோபர் 25-ஆம் தேதி டெல்லியில் நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 28-ஆம் தேதி இரவு திடீரென ரஜினி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரது ரசிகர்கள் பதறி விட்டனர். அதன் பிறகு கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி மதியம் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் “நேற்று இரவு தலை சுற்றல் காரணமாக திரு.ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின், அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் திரு.ரஜினி” என்று கூறப்பட்டிருந்தது. அதன் பிறகு கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி இரவு ரஜினி டிஸ்சார்ஜ் ஆகி சென்னையில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று விட்டார்.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்த புதிய படமான ‘அண்ணாத்த’ ரிலீஸானது. இந்நிலையில், நேற்று ரஜினியை சசிகலா நேரில் சந்தித்து பேசியதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது, ரஜினியின் உடல் நலன் பற்றி கேட்டிருக்கிறார் சசிகலா. மேலும், ரஜினி தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தாராம் சசிகலா.

 

Share.