சசிகுமார் – சத்யராஜ் இணைந்து நடித்துள்ள ‘எம்ஜிஆர் மகன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் எம்.சசிகுமார். இவர் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என எட்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘எம்ஜிஆர் மகன்’ என்ற படம் இன்று (நவம்பர் 4-ஆம் தேதி) தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியுள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்’ என டபுள் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

முதல் முறையாக சசிகுமாருடன் இயக்குநர் பொன்ராம் கைகோர்த்திருப்பதால், ‘எம்ஜிஆர் மகன்’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக இருந்தது. இதில் சசிகுமாருடன் இணைந்து மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மிருணாளினி ரவி நடித்துள்ளாராம். இப்போது, இந்த படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 
 

Share.