ஃபேமிலி எண்டர்டெயினரான ‘ராஜவம்சம்’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த சசிகுமார்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் சசிகுமார். இப்போது சசிகுமார் நடிப்பில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, எம்ஜிஆர் மகன், முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய், உடன் பிறப்பே’ மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என ஒன்பது படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ராஜவம்சம்’ என்ற படத்தை கதிர்வேலு இயக்க, ‘செந்தூர் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் கதையின் நாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளாராம். சமீபத்தில், இப்படத்தினை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தனர்.

பல மாதங்களாக சசிகுமாரின் ரசிகர்கள் இந்த படத்தின் ரிலீஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் சசிகுமார். இப்படத்தை வருகிற அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் சசிகுமாரின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

 

Share.