ரிலீஸான 3 நாட்களில் சதீஷின் ‘நாய் சேகர்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சதீஷ். இவரது காமெடிக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சதீஷ் இப்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்திருக்கும் ‘நாய் சேகர்’ என்ற திரைப்படம் கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. பிரபல காமெடி நடிகர் கிஷோர் ராஜ்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் சதீஷுக்கு ஜோடியாக பவித்ரா லக்ஷ்மி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஜார்ஜ் மரியான், சங்கர் கணேஷ், லிவிங்க்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்பந்தம், மனோபாலா, KPY பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அஜீஸ் இசையமைத்துள்ளார், பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார், ராம் பாண்டியன் படத்தொகுப்பாளராகவும், எம்.ஜி.முருகன் கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் (ஜனவரி 13 முதல் ஜனவரி 15 வரை) இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.1.76 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.