‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்ட நடிகர் சத்யராஜ்… சிபிராஜ் போட்ட ட்வீட்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ். சமீபத்தில் இவர் நடித்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் நடித்திருந்தனர்.

இப்போது சத்யராஜ் நடிப்பில் தெலுங்கில் ‘1945, ராதே ஷ்யாம், பக்கா கமர்ஷியல்’, தமிழில் ‘எதற்கும் துணிந்தவன், பார்ட்டி, காக்கி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இப்படத்தை வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

சமீபத்தில், நடிகர் சத்யராஜுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, ‘கொரோனா’ தொற்றிலிருந்து மீண்டு வந்த சத்யராஜ் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்று விட்டார் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சத்யராஜின் மகனும், பிரபல நடிகருமான சிபிராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share.