‘பாகுபலி’-யில் ‘கட்டப்பா’ ரோலில் மாஸ் காட்டிய சத்யராஜ்… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். சமீபத்தில் இவர் நடித்த ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற தமிழ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் தீரன் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன் நடித்திருந்தனர். இப்போது சத்யராஜ் நடிப்பில் தெலுங்கில் ‘1945, ராதே ஷ்யாம், பக்கா கமர்ஷியல்’, தமிழில் ‘எதற்கும் துணிந்தவன், பார்ட்டி, காக்கி’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சத்யராஜின் கேரியரில் மிக முக்கியமான படங்கள் ‘பாகுபலி 1 & 2’. இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். பிரபாஸ் ஹீரோவாக நடித்திருந்த இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சத்யராஜ் ‘கட்டப்பா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். தற்போது, நடிகர் சத்யராஜ் ‘பாகுபலி 1’-க்காக ரூ.1 கோடியும், ‘பாகுபலி 2’-க்காக ரூ.2 கோடியும் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.