ராய் லட்சுமியுடன் குத்தாட்டம் போட்ட லெஜெண்ட் சரவணன்!

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து வருகிறார் . அந்த படத்தில் இவரே கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் . இந்த படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருந்தது . மேலும் படத்தின் முதல் பாடல் மோசலு மொசுலு என்கிற பாடல் வெளியாகி இருந்தது .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘வாடிவாசல்’ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைலராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மே 29-ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராய் லட்சுமி இந்த பாட்டில் நடிகர் சரவணனுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார் . திருவிழா ஒன்றில் ஆடுவது போல் பாடலின் காட்சியமைப்பு அமைத்து உள்ளது . இந்த பாடல் தற்பொழுது ட்ரெண்டாகி வருகிறது .

Share.