விஜய் சேதுபதியை வாழ்த்திய சீமான் !

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாமனிதன் .
இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் .இந்த படத்தை தயாரிப்பாளர் R.K .சுரேஷ் வெளியிடுகிறார் .இந்த படத்தில் நடிகை காயத்திரி மற்றும் குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தில் முதல் முறையாக இயக்குனர் இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர் . இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது . டிரைலரை பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர் . அந்த வகையில் நடிகரும் இயக்குனருமான சீமான் படத்தின் டிரைலர் பார்த்துவிட்டு ட்வீட் செய்து உள்ளார்.

அன்புத்தம்பி விஜய் சேதுபதி நடிப்பிலும், ஆருயிர் தம்பி சீனு ராமசாமி இயக்கத்திலும் வெளிவரவிருக்கும், ‘மாமனிதன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் கண்டேன்.எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது பொருளாதாரப் போராட்டத்தையும் பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படம் பெரும் வெற்றியடைய, எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்நிலையை உணர்த்தும்விதமாகப் படைக்கப்பட்டிருக்கிற இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ள அன்பிற்கினிய தம்பி யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கும், படத்தை வெளியிடும் தம்பி R.K.சுரேஷ் அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும், அன்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்! என பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
இந்த படம் விஜய் சேதுபதியின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமாக அமையும் என்று நம்பபடுகிறது

Share.