இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தாணு !

நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் வெளியான படம் செல்பி . இந்த படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்த இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தது . இந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு வெளியிட்டார் . இதனை தொடர்ந்து படம் ஓ.டி.டியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது . விழா மேடையில் தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு அடுத்த படத்தை இயக்குவதற்காக இயக்குனர் மதிமாறனுக்கு 10 லட்சம் முன்பணம் கொடுத்தார் .

மேலும் கலைப்புலி.எஸ்.தாணு இந்த விழாவில் செல்பி என்ற தலைப்பை வைத்து மதிமாறன் என்கிட்ட ஒப்புதல் கேட்டதும் சரி என்றேன்.இந்த படத்தில் வேலை செய்த அனைவருக்கும் தொழில் பக்தி இருந்தது என பேசினார் மேலும் எனக்கு மதிமாறனை கொடுத்த நன்றி. 38 நாட்களில் இந்த படத்தை சிறப்பாக எடுத்து முடித்த மதிமாறனை நிறைய பாராட்டலாம் . ஒரே ஒரு காட்சி மட்டும் போட்டு காண்பித்து இந்த படத்தை விற்றுக்கொடுத்தேன். இப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்துள்ளது . இந்நிலையில் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்க வேண்டும் . அதற்காக இப்பவே அதற்கான முன்பணமாக 10 லட்சத்தை வழங்குகிறேன் என்றார் .

Share.