செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாணிக் காயிதம்’… எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்த ட்ரெய்லர்!

தமிழில் கடந்த ஆண்டு (2021) இறுதியில் ரிலீஸான படம் ‘ராக்கி’. இந்த படம் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு முதல் படம். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக் காயிதம்’ மற்றும் நடிகர் தனுஷ் படம் என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது.

இதில் ‘சாணிக் காயிதம்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. இதில் இயக்குநர் செல்வராகவன் – நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இதற்கு யாமினி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘ஸ்க்ரீன் சீன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.

சமீபத்தில், இதன் டீசரை ரிலீஸ் செய்தனர். இந்நிலையில், இன்று படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற மே 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Share.