“ஆயிரத்தில் ஒருவன் படத்துக்காக அந்த பொய்யை சொன்னோம்”… உண்மையை போட்டுடைத்த செல்வராகவன்!

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பார்ட் 2 (A02), ராயன்’ என இரண்டு படங்கள் உருவாக உள்ளது. சமீபத்தில், நடிகராக அவதாரம் எடுத்த செல்வராகவன் ‘சாணிக் காயிதம்’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், இந்த படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் நேற்று (ஆகஸ்ட் 18-ஆம் தேதி) தான் முடிவடைந்தது. இது தவிர முன்னணி ஹீரோவான ‘தளபதி’ விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலிலும் நடித்து வருகிறார் செல்வராகவன். இந்நிலையில், செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இயக்கிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 1-யின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடி தான்.

ஆனால், நாங்கள் அந்த படத்துக்கென ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக ரூ.32 கோடியில் எடுக்கப்பட்ட மெகா பட்ஜெட் படம் என்று பொய் சொன்னோம். அதன் பட்ஜெட்டுக்குரிய வசூலை கலெக்ட் செய்த போதிலும், அது சுமாரான வசூல் என்றே கருத்தப்பட்டது. அதன் மூலம் எதுவாக இருப்பினும், பொய் சொல்லக் கூடாது என்பதை கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார். ‘ஆயிரத்தில் ஒருவன்’ பார்ட் 1-யில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் மிக முக்கிய ரோல்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.