“கொரோனா வந்தா யாரும் பயப்பட தேவையில்லை”… மருத்துவமனையிலிருந்து செந்தில் வெளியிட்ட வீடியோ!

‘காமெடி’ என்று சொன்னாலே செந்தில் – கவுண்டமணி ஆகிய இருவரின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவர்களின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் செந்தில் – கவுண்டமணி பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

இப்போது காமெடி நடிகர் செந்தில் கதையின் நாயகனாக ஒரு புதிய படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படம் மூலம் ஃபேமஸான சுரேஷ் சங்கையா இயக்கி வருகிறார். இதனை ‘சூப்பர் டாக்கீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் சமீர் பரத் ராம் தயாரித்து வருகிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்தது.

தற்போது, இது தொடர்பாக செந்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் “வணக்கம் நான் நடிகர் செந்தில் பேசுறேன். எனக்கு கொரோனா வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேண்டாம். நான் நல்லா இருக்கேன். கொரோனா வந்தா யாரும் பயப்படத் தேவையில்லை. டெஸ்ட் எடுத்துக்கிட்டு வீட்ல நீங்க தனிமைப்படுத்திக்குங்க. டாக்டர் சொன்ன மருந்து மாத்திரையை சாப்பிடுங்க. எனக்கு கொரோனா தடுப்பூசி போட்டதுனால தான் பெரிதளவு பாதிக்கலை. அதே மாதிரி நீங்களும் தடுப்பூசி போட்டுக்குங்க. உடம்புக்கு அவ்வளவு நல்லது. அடுத்த டெஸ்ட்டுக்கு வர சொல்லியிருக்காங்க நாளைக்கு, நெகட்டிவ்ன்னு வந்தா வீட்லையே இருந்து ரெஸ்ட் எடுத்துக்க சொன்னாங்க. பயப்பட தேவையில்லை. வாழ்க வளமுடன்” என்று கூறியுள்ளார்.

Share.