‘பிக் பாஸ் 5’-யில் கலந்து கொள்ளப்போகிறாரா ஷகீலாவின் மகள்?… அவரே சொன்ன தகவல்!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 5-க்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டது. இந்த சீசன் 5-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

Shakeela's Daughter Mila's Insta Post About Bigg Boss 51

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், பிரபல நடிகை ஷகீலாவின் வளர்ப்பு மகளும், திருநங்கையுமான மிலாவிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “நீங்க ‘பிக் பாஸ்’ல கலந்து கொள்ளப்போவதாக கேள்வி பட்டேன். இந்த தகவல் உண்மையா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மிலா “fingers crossed” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இவர் கலந்து கொள்ளப்போவது உறுதியாகியுள்ளது.

Share.