அஜித்தின் ‘வலிமை’ படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற ஷாலினி… அவரிடம் ரசிகர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி நடித்திருக்கிறார். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம்.

இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘வலிமை’யை அஜித்தின் மனைவியும், பிரபல நடிகையுமான ஷாலினி தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படம் முடிந்த பிறகு ஷாலினி தியேட்டரை விட்டு வெளியே வருகையில் ரசிகர் ஒருவர் “ஹாய் மேடம், அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க” என்று சொல்கிறார். அதற்கு ஷாலினியும் “சரி” என்று சொல்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.