‘விருமன்’ படத்தின் ‘மதுர வீரன்’ பாடலுக்கு நடனமாடி அசத்திய ஷாலு ஷம்மு!

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை ஷாலு ஷம்மு. அதன் பிறகு ‘தெகிடி, தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும், றெக்க, Mr.லோக்கல், இரண்டாம் குத்து’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

ஷாலு ஷம்மு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இன்ஸ்டாகிராமில் தினமும் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதால் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது, ஷாலு ஷம்மு நடிப்பில் விஜய் சேதுபதி படமும், இரண்டு வெப் சீரிஸ்களும் லைன் அப்பில் இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்க, ஹீரோயினாக அனு க்ரீத்தி நடிக்கிறார். மேலும், காமெடியில் கலக்க ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் ஃபேமஸான புகழ் நடிக்கிறார்.

இதனை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் கார்த்தியின் ‘விருமன்’ படத்தின் ‘மதுர வீரன்’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

Share.