ஷங்கரின் திடீர் முடிவால் பல கோடி நஷ்டம் !

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படுபவர் இயக்குனர் ஷங்கர் . 1993-ஆம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் கதாநாயகனாக நடித்து இருந்தார் . காதலன் , இந்தியன் , ஜீன்ஸ் , முதல்வன் என் அடுத்து அடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து இருந்தார் . கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான படம் 2.o . இவர் படங்களையும் பாடல்களையும் மிகப்பெரிய பொருள் செலவில் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் .

இந்நிலையில் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் .மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், ரோஹித்துக்கும் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. அந்தச் சமயத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அந்த கலயாணத்தில் கலந்து கொண்டனர் .இந்நிலையில் இவர்களுக்கு மே 1ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார் ஷங்கர் . இதில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ஷங்கர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சுமார் 1500 பத்திரிக்கைகள் அச்சடிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு பத்திரிகையின் விலை 9000 என்றும் செய்தி வெளியாகி இருந்தது . பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த வரவேற்பு அரங்கை பிரமாண்டமாக அமைத்திருந்தார். இதற்கு மட்டும் 6 கோடி செலவு ஆனதாம். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக வரவேற்பு நிகழ்ச்சியை இயக்குனர் ஷங்கர் மாற்றி விட்டார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது . மேலும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல கோடி செலவு செய்துள்ளார் ஷங்கர் இப்பொழுது நிகழ்ச்சி தள்ளிப் போனதால் ஷங்கருக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என்று கூறப்படுகிறது .

Share.