ஷங்கர் – பிரபு தேவா கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘காதலன்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் புதிய படத்தில் டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடித்து வருகிறார். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம்.

இதனை டோலிவுட்டில் பாப்புலர் தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு தனது ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

1994-யில் ஷங்கர் இயக்கத்தில் ரிலீஸான தமிழ் படம் ‘காதலன்’. இந்த படத்தில் ஹீரோவாக பிரபு தேவா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரகுவரன், வடிவேலு, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கிரீஷ் கர்னாட் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.15 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Share.