ராம் சரணை தொடர்ந்து ரன்வீர் சிங்குடன் கூட்டணி… அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் ஷங்கர்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ரெடியாகி வந்த புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வந்தார். இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் வேறு ஒரு புதிய படத்தை இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இந்த படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். இப்படம் நடிகர் ராம் சரணின் கேரியரில் 15-வது படமாம். இப்படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாம்.

தற்போது, இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ள இன்னொரு புதிய படம் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. ஹிந்தி மொழியில் உருவாக உள்ள இந்த படத்தில் ஹீரோவாக பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். இந்த படம் விக்ரம் – ஷங்கர் காம்போவில் வெளியாகி தமிழில் ஹிட்டான ‘அந்நியன்’ படத்தின் ரீமேக்காம். ‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்க உள்ள இதன் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2022) ஆரம்பிக்க பிளான் போட்டுள்ளார் ஷங்கர்.

Share.