‘பிக் பாஸ் 4’ பாலாஜியின் பிறந்த நாள் கொண்டாட்டம்… கேக் ஊட்டி விட்ட ஷிவானி!

பிரபல மாடலான பாலாஜி முருகதாஸ், மிஸ்டர் இண்டர்நேஷனல், மிஸ்டர் பெர்ஃபெக்ட் பாடி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டவர். இவர் சினிமாவிலும் கால் பதிக்க ஆசைப்பட்டு, ‘டைசன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.கே.சுரேஷ் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாராம். இந்த படம் சில காரணங்களால் இதுவரை வெளியாகவே இல்லை.

இதனைத் தொடர்ந்து ‘கரோலின் காமாட்சி’ என்ற ‘ஜீ 5’ வெப் சீரிஸில் நடித்தார் பாலாஜி முருகதாஸ். மீனா ஹீரோயினாக நடித்திருந்த இந்த வெப் சீரிஸ் 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு பாலாஜி முருகதாஸுக்கு அடித்த ஜாக்பாட் தான் ‘பிக் பாஸ்’ என்ட்ரி. விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது.

கடந்த ஜனவரி மாதம் 17-ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். சமீபத்தில், பாலாஜி முருகதாஸ் ஒரு புதிய தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘லிப்ரா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 2-ஆம் தேதி) நடிகர் பாலாஜி முருகதாஸின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பாலாஜி பர்த்டே கேக் வெட்டும் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் மற்றும் வீடியோஸ் வெளியாகியுள்ளது. அப்போது, ‘பிக் பாஸ் 4’யின் இன்னொரு போட்டியாளரும், நடிகையுமான ஷிவானி நாராயணன் தான் பாலாஜிக்கு கேக் ஊட்டி விடுகிறார்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

 

Share.