‘பிக் பாஸ் 4’ சம்யுக்தாவின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட ஷிவானி, ரம்யா பாண்டியன், பாலாஜி!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி கடந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகை சம்யுக்தா உட்பட 18 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

பின், இந்த சீசனில் ஆரி டைட்டில் வின்னர் என்றும், பாலாஜி முருகதாஸ் ரன்னர்-அப் என்றும் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அறிவித்தார். இப்போது, நடிகை சம்யுக்தா நடிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படம், சசிக்குமார் நடிக்கும் படம் என இரண்டு படங்களும் மற்றும் ‘குத்துக்கு பத்து’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

பத்ரி வெங்கடேஷ் இயக்கும் படத்தில் கெளதம் கார்த்திக் – ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடிக்க உள்ளனர். சசிக்குமார் படத்தை இயக்குநர் ஹேமந்த் குமார் இயக்கி வருகிறார். ‘குத்துக்கு பத்து’ வெப் சீரிஸை விஜய் வரதராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி நடிகை சம்யுக்தாவின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, பர்த்டே கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.

Share.