5 மொழிகளில் தயாராகியுள்ள ஸ்ரேயா – நித்யா மேனன் நடித்துள்ள ‘கமனம்’… எப்போது ரிலீஸ்?

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் ஸ்ரேயா சரண். அறிமுகமான முதல் தமிழ் படத்தில் சின்ன ரோலில் தான் நடித்திருந்தார் ஸ்ரேயா. அந்த படம் தான் ‘எனக்கு 20 உனக்கு 18’. அதன் பிறகு ‘மழை’ என்ற படத்தில் ஸ்ரேயாவை கதையின் நாயகியாக அவதாரம் எடுக்க வைத்து அழகு பார்த்தது தமிழ் சினிமா. ‘மழை’ ஹிட்டானதும் நடிகை ஸ்ரேயா சரணுக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது ஸ்ரேயா நடிப்பில் ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘கமனம்’ என்ற திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு கதை – திரைக்கதை எழுதி சுஜானா ராவ் இயக்கியுள்ளார். இதில் ஸ்ரேயா சரணுடன் இணைந்து நித்யா மேனன், பிரியங்கா ஜவல்கர், ஷிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் ட்ரெய்லரை நடிகர்கள் ஜெயம் ரவி (தமிழ் வெர்ஷன்), பவன் கல்யாண் (தெலுங்கு வெர்ஷன்), ஃபஹத் ஃபாசில் (மலையாள வெர்ஷன்), ஷிவராஜ்குமார் (கன்னட வெர்ஷன்), சோனு சூட் (ஹிந்தி வெர்ஷன்) ஆகியோர் ரிலீஸ் செய்தனர். தற்போது, இந்த படத்தை வருகிற மார்ச் 19-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.