சிபிராஜின் த்ரில்லர் படமான ‘கபடதாரி’… சூப்பரான அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்!

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது, தமிழில் ரீமேக்காகும் ஒரு புதிய படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் கிடைத்துள்ளது. கன்னட திரையுலகில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கவலுதாரி’. இந்த படத்தை இயக்குநர் ஹேமந்த் ராவ் இயக்கியிருந்தார். இதில் ரிஷி, ஆனந்த் நாக், அச்யுத் குமார், சுமன் ரங்கநாதன், ரோஷினி பிரகாஷ், அவினாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் மெகா ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் கைப்பற்றினார். இதில் ஹீரோவாக சிபிராஜ் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறாராம். ‘கபடதாரி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த த்ரில்லர் ஜானர் படத்தின் ஷூட்டிங் நேற்று முடிவடைந்து விட்டதாம். விரைவில் திரையரங்குகள் திறந்த பின்பு படத்தை நவம்பரில் ரிலீஸ் செய்யலாம் என ப்ளான் போட்டு வருகின்றனர்.

Share.