ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த ரசிகர்… கடுப்பான நடிகர் சித்தார்த்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். இவர் ஹீரோவாக நடித்த முதல் படமே பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் தான். அது தான் ‘பாய்ஸ்’. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்தார், இதனை ‘ஸ்ரீ சூர்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்திருந்தது.

‘பாய்ஸ்’ படத்துக்கு பிறகு நடிகர் சித்தார்த்துக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘ஆய்த எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் NH4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், எனக்குள் ஒருவன், அரண்மனை 2, ஜில் ஜங் ஜக், அவள், சிவப்பு மஞ்சள் பச்சை, அருவம்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

சித்தார்த் தமிழ் மொழி படங்கள் மட்டுமில்லாமல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். இப்போது சித்தார்த் நடிப்பில் ‘டக்கர், மஹா சமுத்திரம், இந்தியன் 2’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், நேற்று பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இதனால் ஒரு ரசிகர் “R.I.P Siddharth” என்று குறிப்பிட்டு நடிகர் சித்தார்த்தின் புகைப்படத்தை ஷேர் செய்து விட்டார். இதனை பார்த்த சித்தார்த் கடுப்பாகி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

Share.