அடேங்கப்பா… ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் நடிப்பதற்காக சிலம்பரசன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சிலம்பரசனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. டாப் இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இதனை இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஜெயசுதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் சிலம்பரசன் ரூ.2 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.