சிலம்பரசனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘மாநாடு’ படத்தின் சூப்பரான டீசர்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’, இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் இயக்குநர் ஞானகிரி இயக்க உள்ள புதிய படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட போஸ்டர்ஸ் மற்றும் மோஷன் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது. இந்த படத்தின் ஃபைனல் ஷெடியூல் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இப்படத்தை தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 3-ஆம் தேதி) சிலம்பரசனின் பர்த்டே ஸ்பெஷலாக இதன் டீசரை (தமிழ் வெர்ஷன் – ஏ.ஆர்.ரஹ்மான், தெலுங்கு வெர்ஷன் – ரவி தேஜா, மலையாள வெர்ஷன் – ப்ரித்விராஜ், கன்னட வெர்ஷன் – சுதீப், ஹிந்தி வெர்ஷன் – அனுராக் காஷ்யப்) ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.