பிக்பாஸ் புதிய சீசன் ஆரம்பம் !

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி தொடங்கியது முதல் ஒவ்வொரு சீசனும் வெற்றிப்பெற்றுள்ளது. முதல் சீசன் முதல் கடைசியாக நடந்த சீசன் வரை இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் நடிகர் கமல்ஹாசன்.

சினிமாவைத்தாண்டி நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார் . கமலுக்கு இணையாக யாராலும் தொகுத்து வழங்க முடியாது என்கிற அளவுக்கு சிறப்பாக நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு போனார்.

இந்த நிலையில் சமிபத்தில் புதியதாக பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நேரடி நிகழ்ச்சியை டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் தொடங்கியது விஜய் தொலைக்காட்சி . ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பின்பு விக்ரம் படத்தின் படப்பிடிப்பின் காரணமாக அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலிருந்து விலகினார்.இதனை தொடர்ந்து அந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். சிம்பு அவரது பாணியில் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார். இவருக்கும் தனி ரசிகர்கள் இருக்கின்றனர். சமிபத்தில் இந்த நிகழ்சசி முடிவு பெற்றது. பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வெற்றியாளராய் ஆனார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.இந்த புதிய சீசனை கமல் தொகுத்து வழங்குவாரா இல்லை சிம்பு தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இருந்தாலும் கமல்ஹாசன் தான் புதிய சீசனை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Share.