கர்நாடகா செல்லும் சிம்பு !

நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாநாடு. நீண்ட வருடம் கழித்து இந்த படம் சிம்புவிற்கு வெற்றியை தந்த படமாக திகழ்கின்றது.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் சிம்புவிற்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.அந்த வகையில் சிம்பு தற்பொழுது கவுதம் வாசுதேவ் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்கிற படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது . இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சிம்பு .

இந்நிலையில் நடிகர் சிம்பு சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார் . இந்த படத்திற்காக தாடி வளர்த்து கொண்டு இருக்கிறார் சிம்பு . வருகின்ற மே மாதம் 6ஆம் தேதி அந்த படப்பிடிப்பில் நடிக்க உள்ளார் சிம்பு . கர்நாடகா மாநிலம் பெல்லாரி எனும் ஊரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு சிம்புவிற்கு என்றும் அதன் பிறகு மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது .

பத்து தல படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து கவுதம் கார்த்திக் நடித்து வருகிறார் .பிரியா பவனி ஷங்கர் மற்றும் கலையரசன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .

Share.