‘பிக் பாஸ்’ சீசன் 4… சிம்புவின் ரீல் தம்பியும் ஒரு போட்டியாளராமே!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4-க்கான ஷூட்டிங் வெகு விரைவில் துவங்கவுள்ளது. சமீபத்தில், விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 4-க்கான இரண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டது. நடிகர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் இடம்பெற்றிருக்கும் இந்த இரண்டு ப்ரோமோ வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த ப்ரோமோ வீடியோக்களில் ‘பிக் பாஸ்’-யின் லோகோ டிசைன் புதிதாக டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணமுள்ளது கோலிவுட் வட்டாரம். இந்நிலையில், ‘ஜித்தன்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ரமேஷ் ‘பிக் பாஸ் 4’-யில் கலந்து கொள்ளப்போகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இவர் பிரபல நடிகர் ஜீவாவின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் நடித்த ‘ஜித்தன்’ ரமேஷ், ‘ஒஸ்தி’-யில் சிம்புவுக்கு தம்பியாக வலம் வந்திருந்தார். இந்த நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கும் என்று சொல்லப்படுகிறது. வெகு விரைவில் இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் அந்த பிரபலங்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.