சிம்பு ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… ‘மாநாடு’ ஷூட்டிங் ப்ளான்!

‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாநாடு’. பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு (2020) பிப்ரவரி 19-ஆம் தேதி துவங்கப்பட்ட இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது.

சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது. தற்போது, இது தொடர்பாக நடிகர் சிம்பு, ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். படத்தில் கூட்டம் அதிகம் இல்லாமல் இருக்கும் காட்சிகளை ஒரு 28 நாட்களில் எடுக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்த ஷெடியூலின் ஷூட்டிங்கை வெகு விரைவில் சென்னையில் துவங்க உள்ளனர்.

Share.