கோவா செல்லும் நடிகர் சூர்யா !

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். மேலும் நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு என ஒரு நட்சத்திரக் கூட்டம் நடித்து இருந்தது. கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.அந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் நடக்க இருக்கிறது என்றும் இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது .

இந்நிலையில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா இணையும் படத்தை தற்போது ஞானவேல் ராஜா தயாரிக்கவில்லை என்று அவரே தெரிவித்துள்ளார் . படத்தின் பட்ஜெட் அதிகமாக உள்ளதால் இந்த படத்தை தற்பொழுது யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது . யு.வி.கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் சாகோ , ராதே ஷ்யாம் ஆகிய படங்களை தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் தொடங்கி விட்டன என்றும் ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது என்றும் அதன் பின் கோவாவில் 40 நாட்கள் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது .

Share.