அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘சீதா ராமம்’ பட ஹீரோயின்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோகயின்களில் ஒருவராக வலம் வருபவர் மிருணாள் தாகூர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘சீதா ராமம்’ கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சுமந்த், தருண் பாஸ்கர், பூமிகா, வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், பி.எஸ்.வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 நாட்களில் (ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 3 வரை) இந்த படம் உலக அளவில் ரூ.83.85 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்நிலையில், நடிகை மிருணாள் தாகூர் தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.