S.J. சூர்யா நடிப்பை பார்த்த வியந்த நடிகர் !

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் அவரது 20-வது படத்தில் நடித்து வருகிறார் .இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது .இந்நிலையில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகி இருக்கிற படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருக்கிறார் .

இந்த படம் மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது . இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான S.J. சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் . இந்த படத்தை பற்றி சமீபத்தில் பேசிய சிவகார்த்திகேயன் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளார் . அதில் S.J. சூர்யா நடிப்பதை தன்னை மறந்து ரசித்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் . மேலும் அவர் கல்லூரி நாட்களில் S.J. சூர்யா மாதிரி பேசினதையும் மேலும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் S.J. சூர்யா நடுவராக இருந்தபொழுது அவர் பழகியதை பற்றியும் பகிர்ந்து உள்ளார் .

டான் படம் கல்லூரி காலங்களில் நடந்த பலவற்றை தன்னால் திரும்பி பார்க்க முடிந்தது என்று கூறியுள்ளார் சிவகார்த்திகேயன் . இந்நிலையில் இந்த படத்தின் பிரைவேட் பார்ட்டி எனும் பாடல் இன்று வெளியாக இருக்கிறது . படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த பாட்டிற்கும் நாள் எதிர்பார்ப்பு இருக்கிறது .

Share.