தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகும் சிவகார்த்திகேயனின் 20-வது படம்… ஆரம்பமானது ஷூட்டிங்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘அயலான், டான்’ மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொன்னார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனுதீப் கேவி இயக்க உள்ளாராம்.

இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாக உள்ளதாம். இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – சுரேஷ் புரொடக்ஷன்ஸ் – சாந்தி டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது. இதற்கு தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடிக்கவிருக்கிறார். தற்போது, இந்த படத்தின் ஷூட்டிங் காரைக்குடியில் இன்று முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Share.