வாய்ப்பை தவறவிட்ட சிவகார்த்திகேயன்

போடா போடி படம் மூலம் தமிழ்த்திரை உலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இவர் தற்பொழுது காத்துவாக்குல இரண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் . விஜய் சேதுபதி , சமந்தா , நயன்தாரா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார் . இந்த படம் வருகின்ற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது . நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சார்பாக ரவுடி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது . படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .

இதற்கு முன்பு நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை இயக்கி இருந்தார் விக்னேஷ் சிவன் . இந்நிலையில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் முதலில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது . மேலும் சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க இருந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது . தவிர்க்க முடியாத சில காரணங்களால் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகியோரால் நடிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது .

இதற்கு முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடிப்பதாக இருந்தார் . ஆனால் ஏதோ சில காரணங்களால் அந்த படமும் கைவிடப்பட்டது . சிவகார்த்திகேயன் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் ஒரு படம் உருவானால் நிச்சயம்

நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது .

விக்னேஷ் சிவன் அடுத்ததாக நடிகர் அஜித் குமாரை வைத்து படம் இயக்க உள்ளார் . சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார் . மேலும் தெலுங்கு இயக்குனர் அனுதீப் ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் . எனவே தற்போதைக்கு இவர்கள் இரண்டு பேரும் இணைவது சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும் .

Share.