நெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ரஜினிக்கு மகளாக நடிக்க ஒப்பந்தமான சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நடிக்க பிரபல நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவர் சமீபத்தில் ரிலீஸான சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மற்றும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ஆகிய இரண்டு படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.