சிம்புவிற்கு நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான படம் டான் .இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . நடிகர் சமுத்திரக்கனி மற்றும் எஸ்.ஜே . சூர்யா இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி இருந்தார்கள் .பிரியங்கா அருள் மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்து இருந்தது .

இந்நிலையில் படம் திரை அரங்கில் மே 13-ஆம் தேதி வெளியானது . படம் வெளியான முதல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த படத்தை பாராட்டி உள்ளனர் . அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த படம் பிடித்து இருந்தது .

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது . இதனை தொடர்ந்து டான் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி இருந்தனர் . மேலும் இந்த படம் 100 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. டான் படத்தின் வெற்றி விழா நேற்று ( ஜூன் 6 ) சென்னையில் நடந்தது . இதில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் டான் படத்தை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் . குறிப்பாக நடிகர் ரஜினிகாந்திற்கும் , டான் படத்தின் வெற்றிக்கு தன்னை அலைபேசியில் அழைத்து பேசிய நடிகர் சிம்புவிற்கும் நன்றி தெரிவித்தார் .

நடிகர் சிம்புவிற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் நாள் நட்பு உள்ளது அந்த வகையில் இருவரும் இணைந்து ஒரு படம் நடித்தால் அந்த படத்தை யார் இயக்கினால் நன்றாக இருக்கும் என்பதை கமென்ட்ல பதிவிடுங்க .

Share.