சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ள பிரேம்ஜி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெங்கட்பிரபுவின் தம்பி மற்றும் பிரபல நடிகருமான பிரேம்ஜி தற்போது “சத்திய சோதனை” எனும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை ஒரு “கிடாயின் கருணை மனு” படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கவுள்ளார். சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கிறார்.

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி மாலை 4 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என்று பிரேம்ஜி அமரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் கடைசியாக அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான ‘சிம்பா’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இரண்டு தமிழ்ப் படங்களில் கேமியோ ரோலில் வந்திருந்த இவர் மீண்டும் சத்தியசோதனை திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

Share.