சிவகார்த்திகேயன் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘அயலான்’ சிங்கிள் டிராக்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர்’, ‘அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் சயின்ஸ்-ஃபிக்ஷன் படமான ‘அயலான்’-யின் ஃபைனல் ஷெடியூலின் ஷூட்டிங் கடந்த ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முடிந்து விட்டது. தற்போது, இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘வேற லெவல் சகோ’வை இன்று (பிப்ரவரி 17-ஆம் தேதி) சிவகார்த்திகேயனின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்துள்ளனர். ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைத்து பாடியுள்ள இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ஹீரோயினாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

Share.