முடிவடைந்த சிவகார்த்திகேயனின் “டாக்டர்” திரைப்படத்தின் ஷூட்டிங்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். “கோலமாவு கோகிலா” படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் வரும் “செல்லம்மா” என்ற பாடலை ஏற்கனவே திரைப்படக் குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

இந்த செல்லம்மா பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் தற்போது “டாக்டர்” படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார்கள். விரைவில் இந்த படத்தின் அப்டேக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கிறார்கள்.

Share.